நாட்டில் இறக்குமதி பச்சரிசியை பயன்படுத்துவதாக கூறப்படுவதில் அமைச்சு விசாரணை நடத்தும்-டத்தோ அர்தர் ஜோசப்!
- Muthu Kumar
- 25 Oct, 2024
கோலாலம்பூர், அக். 25 -
உள்நாட்டு பச்சரிசி விநியோகத்தில் ஊழல் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு புதிய விதிமுறை ஒன்றை ஏற்படுத்தும்.பல அரிசி தொழிற்சாலைகள், உள்நாட்டு பச்சரிசிக்கு பதிலாக இறக்குமதி பச்சரிசியை மாற்றி வருவதாகக் கூறப்படுவதற்கு எதிராக தமது அமைச்சு விசாரணை நடத்தும் என்று, அதன் துணை அமைச்சர் டத்தோ அர்தர் ஜோசப் குரூப் தெரிவித்தார்.
"முதலில் நாங்கள் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. நெல் தொழிற்சாலைகளுக்குச் செல்லுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். உள்நாட்டு பச்சரிக்கு பதிலாக இறக்குமதி பச்சரிசி மாற்றப்படுவதாக கூறப்படுவது உண்மையா என்பது கண்டறியப்படும்.உண்மையில் அப்படி நடந்தால், மலேசிய மக்களின் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு உள்நாட்டு பச்சரிசி இருப்பதை உறுதிப்படுத்த புதிய விதிமுறையை நாங்கள் ஏற்படுத்த வேண்டி வரும் என்று, மக்களவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது அர்தர் தெரிவித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நாட்டின் சந்தைகளில் உள்நாட்டு பச்சரிசி பற்றாக்குறை நிலவத் தொடங்கியதைத் தொடர்ந்து, அவ்விவகாரம் மீது அமைச்சு எப்போதும் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் 19ஆம் தேதி வரையில், 10 கிலோ எடை கொண்ட 60 லட்சம் உள்நாட்டு பச்சரிசி மூட்டைகள், ஃபாமாவினால் விநியோகிக்கப்பட்டதாக அர்தர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *