கார்த்தி 29' எனப் பெயர் வைக்கப்பட்ட திரைப்படம் இரு பாகங்கள் இல்லை!

top-news

வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக 'கார்த்தி 29' எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முதலில் படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் இப்போது ஒரே பாகமாகதான் படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரியவுள்ளதாக சொல்லப்படுகிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *