இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொன்ன பேரரசியார்!

top-news

பத்து பஹாட், அக் 5: மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசியார் ராஜா ஜாரித் சோஃபியா, கம்போங் செலாமட்டில் உள்ள  16 வயது ஐரீன் சோஃபியா முகமது கைருல் ஃபைசலின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஐரீன் சோஃபியாவின் மறைவால் ஏற்பட்ட துயரத்தையும் குடும்பத்தின் சுமையையும் குறைக்கும் வகையில், ராஜா ஜாரித் சோஃபியா அவர்களுக்குத் தனது சொந்த நிதியுதவியை வழங்கினார்.

மேலும், ஐரீன் சோஃபியாவின் தந்தை முகமட் கைருல் ஃபைசால் க்யார், பாட்டி ஜமேயா ரபானி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் பேரரசி ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைத் தெரிவித்தார்.

ஐரீன் சோஃபியா கடந்த சனிக்கிழமை யோங் பெங்கில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய ஆண் மாணவர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் மற்றும் சூழல் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *