ஓராங் அஸ்லி மருத்துவமனைக்கு பேரரசியார் விஜயம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 23: மலேசியாவின் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா, கோம்பாக் (HOAG) ஓராங் அஸ்லி மருத்துவமனைக்கு இன்று விஜயம் செய்தார்.

கடந்த சனிக்கிழமை இஸ்தானா நெகாராவில் நடந்த மலேசியாவின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் பதவியேற்றதை நினைவுகூரும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்தது.

காலை 9.53 மணிக்கு வந்திறங்கிய பேரரசியாரை பிரதமரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசாரின் மனைவி டத்தின்ஸ்ரீ மஸ்தியானா முகமது ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்வுக்கான சிறப்புக் குழுவின் தலைவராக இருக்கும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் மற்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மட் ஆகியோர் தங்கள் இல்லத் துணையுடன் வந்திருந்தனர்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *