ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்த செப் அலெக்ஸி ஜிமின் மர்மமாக உயிரிழப்பு!

top-news

ரஷ்யா போர் தொடர்பாக புதினை விமர்சித்த 'செஃப்' அலெக்ஸி ஜிமின், செர்பியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அலெக்ஸி ஜிமின் 2014 இல் ரஷ்ய ஜனாதிபதி புதின் கிரிமியா தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை விமர்சித்த பின்னர் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.

அலெக்ஸி ஜிமின் பிரிட்டனைச் சேர்ந்தவர். அவர் ரஷ்யாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார். அங்கிருந்து ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அலெக்ஸி ஜிமின் 2022 இல் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

பின்னர் அவரது ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அலெக்ஸி ஜிமின் தான் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்த செர்பியா சென்றார். அங்குள்ள ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாராணை நடத்தி வருகின்றனர்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *