சென் டாங் ஜி-டோ ஈ வீ-சீனா ஓபன் பூப்பந்து போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 23-

மலேசியாவின் முதல்நிலை கலப்பு இரட்டையர் இணையான சென் டாங் ஜி - டோ ஈ வீ, சாங்ஜோவில் நடைபெறும் சீனா ஓபன் பூப்பந்து போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

உலகின் நான்காவது தரவரிசையில் உள்ள இந்த இணை, அமெரிக்காவின் பிரஸ்லி ஸ்மித்-ஜென்னி கை இணையை 22-20, 21-12 என்ற செட் கணக்கில் 35 நிமிடங்களில் வீழ்த்தியது. இந்த ஆட்டம் ஒலிம்பிக் விளையாட்டு மைய ஜிம்னாசியத்தில் நடைபெற்றது.

இந்த வெற்றி, உலகத் தரவரிசையில் 29ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க இணைக்கு எதிராக டாங் ஜி-ஈ வீ பெற்ற இரண்டாவது தொடர் வெற்றியாகும். இதற்கு முன், கடந்த மே மாதம் சிங்கப்பூர் ஓபனில் இவர்கள் இந்த இணையை நேரடி செட்களில் தோற்கடித்திருந்தனர்.

கடந்த சில வாரங்களில் இந்தோனேசியா ஓபன், ஜப்பான் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய டாங் ஜி-ஈ வீ, தங்களது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சீனா ஓபனில் இரண்டாவது சுற்றில் முடிவடைந்த தங்களது பயணத்தை மேம்படுத்த விரும்புகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *