கோலலங்காட்டில் டெங்கி காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங் நவ.9

மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையில் கிடைக்கப் பெற்ற புள்ளி விவரங்கள் படி கடந்த 3.11.2024 அன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கை வாயிலாக மாவட்ட ரீதியில் இதுவரை 20 பேர் டெங்கி காய்ச்சல் காரணமாக பந்திங் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கோலலங்காட் சுகாதார இலாகா உயர் அதிகாரி டாக்டர் நோர்ஹயாத்தி மொக்தார் தெரிவித்தார்.

கவாசான் தம்பாஹான் தஞ்சோங் சிப்பாட் வட்டாரத்தில் டெங்கி காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் சுகாதார இலாகா பணியாளர்கள் தற்போது ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு மருந்து தெளிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.அதே வேளையில், தஞ்சோங் சிப்பாட் காவல் துறையினர் தங்குமிடத்தில் இருவர் டெங்கி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் நோர் ஹயாத்தி தெரிவித்தார்.

வட்டார மக்கள் குடியிருப்பாளர்கள் சங்கத்தின் கவனத்திற்கும் அறிக்கைகள் அனுப்பப்பட்ட நிலையில் அதன் தலைவர்கள் வார இறுதி நாட்களில் தன்னார்வ சேவையாளர்கள் உதவியுடன் கொத்தோங் ரோயோங் கூட்டுப் பணி நடவடிக்கைகள் மூலம் கால்வாய்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *