பகாங் அரச குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் தனிநபர்களால் தாக்கப்பட்ட நபருக்கு நீதி வேண்டும்!
- Muthu Kumar
- 19 Oct, 2024
கோலாலம்பூர், அக் 19:
கடந்த மாதம் பகாங் அரச குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் தனிநபர்கள் குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கட்டுமானத் தொழிலாளிக்கு நீதி வழங்குமாறு தெங்கு மஹ்கோட்டா பகாங் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.சினார் ஹரியான், தெங்கு ஹசனல் தொழிலாளிக்கு உடனடி நீதியை கோரியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (அக் 18) தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புதுப்பிப்பில், நீதியை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்லாமல், வெளிப்படையாகவும் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.முன்னதாக, இஸ்தானா அப்துல்அஜிஸ் வெளியிட்ட அறிக்கையின் மூலம், தெங்கு ஹசனல், உடனடியாக முழுமையான விசாரணையை நடத்துமாறு காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார்.
எந்தவொரு தரப்பினருடனும் சமரசம் செய்யாமல், வெளிப்படையாகவும், நியாயமாகவும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அரச குடும்ப உறுப்பினர் மற்றும் பல நபர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கொண்டு தாக்கியதில் சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு பணியாளர் ஒருவர் காயமடைந்ததாக முன்னர் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *