ECRL ரயில் திட்டம் மூலம் 2029-ஆம் ஆண்டில் 418 மில்லியன் வருமானம் கிடைக்கும்!
- Shan Siva
- 17 Nov, 2026
கோலாலம்பூர், நவ 17: கிழக்குக் கடற்கரை
ரயில் திட்டமான ECRL மூலம் 2029ஆம் ஆண்டில் 418 மில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா
தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டில் 260 மில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைக்கும்
என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சரக்கு
ரயில் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருமானம் 2027ஆம் ஆண்டில் 68 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2029ஆம் ஆண்டில் 214 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகாலத்தில் ECRL திட்டத்தின் மொத்த வருமானத்தில் 70 விழுக்காடு சரக்குப் போக்குவரத்து
மூலமும் 30 விழுக்காடு பயணிகள் போக்குவரத்து மூலமும்
கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுவர்களுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகையும் மாணவர்களுக்கு 40 விழுக்காடு கட்டணச் சலுகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

