பெட்ரோல், டீசலின் விலை மே 29 வரை எந்த மாற்றமும் கிடையாது!

top-news
FREE WEBSITE AD

RON97 மற்றும் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் வியாழன் மே 23 முதல் மே 29 வரை முறையே லிட்டருக்கு RM3.47, RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும்.

தானியங்கி விலை நிர்ணய பொறிமுறைகளை பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை  விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சகம் இன்று புதன்கிழமை (மே 23) தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, இரண்டு பொருட்களின் சந்தை விலையும் தற்போதைய உச்சவரம்பு விலையைத் தாண்டி உயர்ந்திருந்தாலும், அரசாங்கம் RON95 இன் உச்சவரம்பு விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் லிட்டருக்கு RM2.15 ஆகவும் பராமரிக்கும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *