சுரங்கத் திட்டம் ஊழல் தொடர்பாக என் மீது எந்த தவறும் இல்லை-டத்தோ ரூபின் பலாங்!
- Muthu Kumar
- 14 Nov, 2024
கோத்தா கிணபாலு: கபுங்கன் ராக்யாட் சபா சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சுரங்கத் திட்டம் குறித்து வேறொரு நபருடன் விவாதித்ததாகக் கூறப்படும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து எந்த தவறும் என் மீது இல்லை என்று மறுத்துள்ளார்.
"அந்தக் விவாதத்தில் ஊழலுக்கான சாத்தியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. என்னை விசாரிக்க எந்த காரணமும் இல்லை" என்றும் கெமாபோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரூபின் பலாங் தெரிவித்தார்.இருப்பினும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தன்னை அழைத்தால், அவர்களுக்கு ஒத்துழைப்பதாக அவர் கூறினார்.
முன்னதாக, ஒரு சுரங்கத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ரூபினைக் ஊழல்வாதியாக கூறப்படும் ஒரு விசில்ப்ளோவரின் காணொளி வெளியிடப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *