கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் ?

top-news

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றி படங்களே இல்லாத நிலையில் கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டுளளது.

வணங்கான் படத்திலும், புறநானூறு படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்ட சூர்யா இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவரது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

இந்நிலையில் கங்குவா படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட அதே அக்டோபர் 10ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும் ரிலீஸ் ஆவது உறுதியாகி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி, சூர்யா நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியீடு காண்பதால் வேட்டையன் படத்தை காட்டிலும் கங்குவா படத்தை பாதிக்குமா என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு இருந்து வருகிறது.

இதையடுத்து கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10ம் தேதி என்பதில் இருந்து அக்டோபர் 31ம் தேதி தீபாவளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வேட்டையன் படம் ரிலீஸாகி 20 நாட்களுக்கு பிறகு தீபாவளியன்று கங்குவா படம் ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதுதவிர விடுதலை 2, விடாமுயற்சி படங்களும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதாக இருக்கிறது. கங்குவா ரிலீஸ் அக்டோபர் 31ம் தேதி என்பதால், மற்ற படங்களின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் வர வாய்ப்புள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *