ராம் இயக்கத்தில் உருவாகிய பறந்து போ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

top-news

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் சில இயக்குநர்களின் ஒருவர் இயக்குநர் ராம் (Director Ram). மனிதர்களின் வாழ்வியலை இயல்பாக படமாக்க கூடியவர்.

இயக்குநர் ராம் இறுதியாக  இயக்கி 2019-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியானது. அதன் பிறகு நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரியை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தை உலக அளில் உள்ள சர்வதேச பட விழாக்களில் திரையிட்டு வருகிறார். மேலும் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக படத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பறந்து போ படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *