விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது! - ஹன்னா யியோ

top-news

கோலாலம்பூர், ஜன 25: புதிய தலைவர்களுக்கான தேர்தல்களின் போது அரசியல் தலையீடுகளைக் குறைக்குமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யியோ நாட்டில் உள்ள விளையாட்டு சங்கங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளையாட்டு சங்கங்களின் வருடாந்திர பொதுக் கூட்டங்களின் போது நடத்தப்படும் தேர்தல்கள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியதாக பெர்னாமா மேற்கோள் காட்டியுள்ளது.

தொடர்ச்சியான அரசியல் தலையீடுகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களின் வளர்ச்சி மற்றும் செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கும் என்று அவர் கூறினார்.

அரசியல் அரசியல் கட்சிகளுடன் இருக்க வேண்டும். விளையாட்டு சங்கங்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும், என்று அவர் வலியுறுத்தியுள்ளார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *