கங்குவா திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சி இணையத்தில் கசிந்தது!

top-news
FREE WEBSITE AD

சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனால், படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக உழைத்து வருகின்றனர். முக்கியமாக, கங்குவாவில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், பல நிறுவனங்கள் இதன் பணிகளைச் செய்து வருகின்றன.

இந்த நிலையில், கடலில் செல்வதுபோலவும் முதலையின் கண் தெரிவதுமான கங்குவா விஎஃப்எக்ஸ் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *