குழிக்குள் விழுந்த இந்திய மாதுவைத் தேடும் முயற்சி தொடர்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: இந்தியாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் தலைநகர் ஜாலான் மஸ்ஜித் பகுதியில் உள்ள ஒரு குழியில் விழுந்த நிலையில், அவரைத் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுஹ்.

பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 90 பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளதாக டாங் வாங்கி காவல் துறை தலைவர், உதவி ஆணையர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

சம்பவத்தின் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில், அந்தப் பெண்ணைத் தேடும் பணி உடனடியாக செயல்படுத்தப்பட்டது.

இதுவரைக்கும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோலாலம்பூர் நகர மண்டபம், குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனை போன்ற ஆகியவை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் இன்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அங்குள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்ததாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *