தகாத நட்புகள்,சமூக சீர்கேடுகளில் இருந்து மாணவர்களை விடுவிக்கும் நடவடிக்கைதான் விளையாட்டுத் துறை!

top-news

சிரம்பான், செப்.30-

கல்வியில் பின் தங்கும் இந்திய மாணவர்கள் டிவேட் தொழில் திறன் பயிற்சியை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளுக்கு அந்த அறிவுறுத்தலை முன்வைத்த நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன், இப்பயிற்சியின் மூலம்அவர்களின் எதிர்காலத்தை உருமாற்றம் செய்ய வாய்ப்பாக அமையும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று சிரம்பான் செயிண்ட் போவ்ல் இடைநிலைப்பள்ளி திடலில் நடைபெற்ற சிரம்பான் மாவட்ட இடைநிலைப்பள்ளி இந்தியர் மன்ற ஏற்பாட்டில் ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும், இடைநிலைப்பள்ளி இந்திய மாணவ கால்பந்து அணிகளுக்கிடையிலான கெர்கிஸ் கிண்ண கால்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்து அவ்வாறு பேசிய அருள்குமார், கால்பந்து துறையில் இந்திய மாணவர்கள் மிளிர்வதோடு, அவர்கள் அத்துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பை இதுபோன்ற போட்டிகள் ஏற்படுத்தித் தரும் என நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள்குமார் நம்பிக்கை தெரிவித்தார். அதே வேளை இந்திய மாணவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விடுபட்டு கல்வி, விளையாட்டு போன்ற நடவடிக்கைகளில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என அந்த மாணவர்களுக்கு அருள்குமார் அறைகூவல் விடுத்தார்.

மேலும் இந்திய அமைப்புகள் இந்திய மாணவர்களை நல்வழிக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதனிடையே சிரம்பான் மாவட்ட இடைநிலைப்பள்ளி இந்திய ஆசிரியர்கள் மன்றத் தலைவர் வேலன் பேசுகையில் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

ஆனால் தகாத நட்புகளில் சமூக சீர்கேடு கலாச்சாரங்களில் அவர்களின் ஈடுபாடு அதிகரித்து வருவதாக முன்னாள் தேசிய இடைநிலைப்பள்ளி முதல்வருமான அவர் சுட்டிக்காட்டினார். அதிலிருந்து அவர்களை விடுவிக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கைதான் விளையாட்டுத் துறையும், அதற்கு உட்பட்ட கால்பந்து துறையும் என அவர் குறிப்பிட்டார்.

கல்வியில் பின்தங்கும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி, சரியான வழிகாட்டலை வழங்குவதற்கு எங்கள் மன்றம் தயார் நிலையில் உள்ளது. பெற்றோர்களும், மாணவர்களும் தாராளமாக எங்கள் உதவியை நாடலாம் என வேலன் மேலும் கூறினார். நேற்று நடைபெற்ற இப்போட்டியில் சிரம்பான் மாவட்ட அளவில் 14 இடைநிலைப்பள்ளி அணிகள் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *