ருத்ராட்சம் பிறந்த கதையும்,அணியும் முறையும்!

top-news
FREE WEBSITE AD

ருத்ராட்சம் பிறந்த கதை சுவாரஸ்யமானது. திரிபுராசுரன் என்பவன் பிரம்மனிடம் பெற்ற வரத்தைக் கொண்டு தேவர்களை துன்புறுத்திக்கொண்டிருந்தான். தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கையிலாயம் சென்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டனர்.உடனே, தேவர்களின் சக்தியை ஒன்றினைத்து, மிகப்பெரிய வல்லமை படைத்த அகோரம் என்னும் ஆயுதம் ஒன்றை உருவாக்கினார். அப்போது சிவபெருமானுக்கு ஏற்பட்ட பேரிரக்கம் காரணத்தால், தன்னுடைய மூன்று கண்களையும் மூடினார்.




பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக மாறியது. அந்த ருத்திராட்ச மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்திராட்சம் ஆகும்.ஒன்று முதல் இருபத்தி ஏழு முகங்கள் கொண்ட ருத்ராட்சத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானலும் அணியலாம்.பெண்கள் அணிவதற்கு சில வரையறைகள் உள்ளன. அதை முறையாக பின்பற்றி அணிந்து கொள்வது நலம்.




புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வியர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும்.அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது.வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.




இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.சீரான ரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்குள் சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது.உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவ குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

(குறிப்பு:இவை அனைத்தும் ஆன்மீக செய்திகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்)



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *