மாணவியைக் கொலை செய்த மாணவன் வருத்தம்! மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் சாட்சியம்
- Shan Siva
- 13 Aug, 2026
ஷா ஆலம், ஆக 13: கடந்த ஆண்டு
பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் மாணவி
ஒருவரைக் கொலை செய்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுவன், அந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளான்.
வழக்குத் தரப்பு முகாந்திரத்தை
நிலைநாட்டிய பின்னர், தனது தரப்பு
வாதத்தை முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்ட அந்தச் சிறுவன், குற்றவாளிக் கூண்டிலிருந்தே சத்தியப்பிரமாணம் செய்யாமல்
வாக்குமூலம் அளித்தான்.
நடந்ததற்கும், மரணத்தை ஏற்படுத்தியதற்கும் அவன் வருத்தம் தெரிவித்தான் என்று
உயர் நீதிமன்ற நீதிபதி அட்லின் அப்துல் மஜித் முன்னிலையில் நடந்த விசாரணைக்குப்
பிறகு,
அவனது தரப்பு வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் செய்தியாளர்களிடம்
கூறினார்.
அந்தப் பதின்வயது சிறுவன்
சுமார் ஐந்து ஆண்டுகளாக மனநோய் மற்றும் மாயத்தோற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக
மனநல மருத்துவர் சாட்சியமளித்ததாக அவர் கூறினார்.
குறிப்பாக, குழந்தைப் பருவத்தில் தொடங்கும் மனநோய்க்கு, நீண்டகால சிகிச்சை அளிக்காமல் இருப்பது அதனை மோசமாக்கும்
என்று மனநல மருத்துவர் தெரிவித்ததாக ஃபூங் மேலும் கூறினார்.
அக்டோபர் 14, 2025 அன்று காலை 9.20 மணி முதல் 9.35 மணிக்குள்
பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளிக் கழிப்பறையில் 16 வயது சிறுமியைக் கொலை செய்ததாக அந்தப் பதின்வயது சிறுவன் மீது
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் உள்ள இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை
விதிக்கப்படும். இருப்பினும், 2001 ஆம்
ஆண்டின் குழந்தை சட்டத்தின் பிரிவு 97(1), குற்றம் நடந்த நேரத்தில் 18 வயதுக்குக்
குறைவாக இருந்த ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதைத் தடை செய்கிறது.
மாறாக, பிரிவு 97(2), பொருந்தக்கூடிய
வகையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் மாநில ஆளுநர் ஆகியோரால்
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு குற்றவாளியைக் காவலில் வைக்க வழிவகை செய்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



