மனைவியின் கண்முன்னே கணவரை இழுத்துச் சென்ற புலி! - ஈப்போவில் பயங்கரம்

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, கெரிக்கில் மனைவியின் கண் முன்னே புலி ஒன்று கணவரை இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

54 வயது கணவர் அதிகாலை கழிப்பறைக்குச் சென்ற போது, அங்கு உறுமல் சத்தம் கேட்ட அவரது தாய்லாந்து மனைவி, கதவைத் திறந்து பார்த்தபோது – ஒரு புலி தனது கணவனை அருகில் உள்ள   புதருக்குள்  இழுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண்மணியின்  கணவரின் உடல் வீட்டிலிருந்து சுமார் 100 மீ தொலைவில், இடது கால் மற்றும் கழுத்தில் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது என்று பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிசி மாட் அரிஸ் கூறினார்.

நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை கெரிக்-ஜெலி கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் KM79.2 க்கு அருகில் உள்ள பாகான் பாலேக் குடியிருப்புக்கு வெளியே இத்தாக்குதல் நடந்துள்ளது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *