யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஆஸ்திரிய அணி வெற்றி!

top-news

யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஆஸ்திரிய அணி 3-1 என போலந்தை வீழ்த்தியது.

ஜெர்மனியின் பெர்லினில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'டி' பிரிவு லீக் போட்டியில் போலந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆஸ்திரிய அணிக்கு 9வது நிமிடத்தில் ஜெர்னாட் டிரானர் ஒரு கோல் அடித்தார்.

30வது நிமிடத்தில் போலந்து வீரர் பியாடெக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் பாம்கார்ட்னர் மற்றும் மார்கோ அர்னாடோவிக் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் ஆஸ்திரியா 3-1 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *