நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது! - லிம்
- Shan Siva
- 08 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 8: டிஏபி தலைவர் லிம் குவான் எங் மீது முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கூறிய அவதூறு தொடர்பாக லிம் தொடுத்த வழக்கில், இன்று வழங்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தாம் மகிழ்ச்சி அடைவதாக லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
முகைதீன் கூறியது
தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று கூறிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தாம்
நன்றியுள்ளவனாக இருப்பதாக லிம் தெரிவித்துள்ளார்.
2018 மற்றும்
2020 க்கு இடையில் நிதியமைச்சராக இருந்த லிம், பேஸ்புக் மற்றும் முக்கிய செய்தித்தாள்கள் மற்றும்
இணையதளங்களில் முகைதீன் கூறிய மூன்று அறிக்கைகளுக்கு மன்னிப்புக் கோரியும் மற்றும்
திரும்பப் பெறவும் கோரி மார்ச் 27 அன்று வழக்கு தொடர்ந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *