'₹' மாற்றாக 'ரூ' என குறிப்பிடப்பட்டது பற்றி ஸ்டாலின் விளக்கம்!

top-news

தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூபாயை குறிக்க '₹' மாற்றாக 'ரூ' என குறிப்பிடப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் காணொளி வெளியிட்ட அவர், "தமிழ்நாடு பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தொழில்நுட்ப ரீதியாக முக்கியமானவை. சில திட்டங்களை எவ்வாறு உருவாக்கினோம் என்பதை பகிர்ந்துகொள்கிறேன்.

தமிழின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்து '₹' பதிலாக 'ரூ' என பயன்படுத்தினோம். ஆனால், மத்திய அரசு அதனை பெரிதாக்கியது. தமிழுக்கு எதிராக உள்ளவர்கள் இதனை அனாவசியமாக விவாதப் பொருளாக மாற்றியுள்ளனர்" எனக் கூறினார்.

மேலும், "100 நாள் வேலைத் திட்ட ஊதியம், பேரிடர் நிதி, பள்ளிக் கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்திருந்தேன்.ஆனால், மத்திய நிதி அமைச்சர் இவை பற்றி பேசாமல் 'ரூ' குறித்தே பதிலளித்துள்ளார். அவர்களே பல அரசுத் தகவல்களில் 'ரூ' என பயன்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், 'ரூ' மீதான விமர்சனத்தை முன்னிறுத்துகிறார்கள்" என்றார். "மொத்தத்தில், இந்திய அளவில் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட். நிபுணர்கள் ஆலோசனையுடன், அடித்தட்டு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, உலகளவில் சிறந்த திட்டங்களை முன்வைத்தே இந்த பட்ஜெட்டை உருவாக்கினோம்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *