மலேசியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற சீனா தயார்!
- Shan Siva
- 21 Sep, 2024
பெய்ஜிங், செப் 21: மலேசியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றவும், வளர்ச்சி உத்திகளை மேலும் ஒருங்கிணைக்கவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் சீனா தயாராக உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் நன்மைகளை அதிகரிக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீன அதிபர் Xi Jinping தெரிவித்துள்ளார்.
பகிர்வு மற்றும் எதிர்கால சமூகம் (CSF) என்ற மலேசிய பிரதமரின் மலேசியா மடானியின் கொள்கையுடன் சீனாவும் மலேசியாவும் இதேபோன்ற கருத்தைப் பகிர்ந்து கொண்டதாக அவர் நேற்று மலேசியாவின் பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்காக மலேசியாவுடன் ஒத்துழைக்க சீன வர்த்தக துறைகளை அதிபர் ஊக்குவித்தார்.
இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், 2013 இல் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வளரும் என்று ஜி நம்பிக்கைத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *