பிரமாண்டமாய் அரங்கேறிய 'திரையிசை கண்ட இலக்கியம் 2026' வெற்றித் திருவிழா!

top-news
FREE WEBSITE AD

ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவில், மலர் டிவி வழங்கிய 'திரையிசை கண்ட இலக்கியம் 2026  நயம்பட உரைப்போம்'  இறுதிப் போட்டி  பெட்டாலிங் ஜெயா சிவிக் பல்நோக்கு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தேசிய பண், தமிழ் வாழ்த்து ஓம்ஸ் சமய வகுப்பு மாணவர்களின் இறைவாழ்த்தோடு, வை பி சிவபாக்கியம், மலாக்கா மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் கவிதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். 

அப்சரஸ் நிருத்யா நாட்டியாலயா அகாடமி மாணவர்களின் பரதக்கலை படைப்போடு,மலர் டிவி ஆசிரியர் சண்.சிவாவின் வரவேற்பு உரையோடு ஆரம்பமானது விழா. முன்னதாக நேபாள் துயரத்தில் சிக்கியவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியை மலர் டிவியின் மேலாளர் தினகரன் சங்கரன் வழி நடத்தினார். நெறியாளராக சாய் தட்சாயினி தொடர்ந்தார். இந்நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்,  ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன்  நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் சபாநாயகர் டத்தோ ரவி, மலர் டிவியின் நிர்வாக இயக்குநர், டாக்டர் பழனீஸ்வரன், அரிமா சங்கத்தின் தேசிய உதவித் தலைவர், வழக்கறிஞர்  டத்தோ முருகேசன், பிரபல பின்னணிப்பாடகரும், இலக்கியவாதியுமான கலைமாமணி TL மஹாராஜன் , இந்திய ஆய்வியல் துறை தலைவர் முனைவர் ரவீந்திரன் மாரையா, முன்னாள் தலௌவர்கள் முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் குமரன்,  உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் ப.கு சண்முகம், தொழிலதிபர் டத்தோ கோபாலகிருஷ்ணன், தொழிலதிபர் பஞ்சா நிர்வாக இயக்குநர்  கணேஷ், மலாக்கா மாநில கல்வி இலாகா உதவி இயக்குநர்  கவிதா, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா உதவி இயக்குநர் விஜயலட்சுமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற  இந்நிகழ்வில் பொதுப் பிரிவு இயோர் பிரிவு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில்  20 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் கலந்துகொண்டு திரையிசை இலக்கியம் குறித்து பேசினர்.

இலக்கியத் தேடல்  நம் பேச்சாளர்களை மென்மேலும் மெருகேற்றியிருக்கிறது என்பதை அவர்களின் பேச்சில் உணர முடிந்தது. இலக்கிய நயத்தோடு சொற்களில் முக்குளித்தனர் அவர்கள்.

வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க நீதிமான்களாய், கல்வியில் சிறந்த நடுவர் பெருமக்கள் பங்கேற்றனர். மருத்துவர் ஜெயபாலன், முனிவர் செல்வஜோதி,  மின்னல் பண்பலை சங்கர் ஆகியோர் நடுவர்களாக சிறப்பாகப் பணியாற்றி வெற்றியாளர்களௌத் தேர்வு செய்தனர்.

ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் முதல் பரிசான 5000 ரிங்கிட் மற்றும் தங்கப் பதகத்தைப் பொதுப் பிரிவில் தமிழரசி முனியாண்டியும், இளையோர் பிரிவில் ஷக்தி ரவீந்திரனும் வென்று வாகை சூடினர்.

பொதுப் பிரிவில் இரண்டாவது பரிசுவடிவேலு சின்னக்கண்ணு பெற்றார்.  அவருக்கு 3000 ரிங்கிட் ரொக்கப்பணம் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

பொதுப்பிரிவின் மூன்றாவது வெற்றியாளராக மதியழகன் கோவிந்தசாமி வெற்றி பெற்றார் அவருக்கு 1500 ரிங்கிட் ரொக்கப்பணம் மற்றும் தங்கப் பதக்கவழங்கப்பட்டது.

இளையோர் பிரிவில் சங்கரி சிவபாலன் இரண்டாது பரிசை வென்றார்.

இளையோர் பிரிவில் மூன்றாவது பரிசினை காயத்ரி பாலன் பெற்றார்.

மேலும்4 முதல் 10 வது இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் 500 ரிங்கிட் வழங்கப்பட்டது.

கவிதா வீரமுத்து, கயல்விழி பழனி, சாந்தி வேலாயுதம், மிருத்யூஞெயன் சுந்தரமூர்த்தி, டி.எஸ். டாக்டர் திலீப்குமார் மாசிலாமணி, ஜெகதீசன் செல்வராஜு, சுகந்தி இலட்சுமணன்

மக்கள் தேர்வாக சக்தி ரவீந்திரன் வாகை சூடினார்.

மேலும் நிகழ்வில் மரபுக் கவிஞர் பா தாசனுக்கு தமிழ்ச் சாதனையாளர் விருதும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
 
நிகழ்வில் பேசிய குணராஜ் ஓம்ஸ் அறவாரியம் பல்வேறு நலத்திட்டங்களைப் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ஓம்ஸ் பாதியாகராஜன் தமிழ் கல்விக்காகவும், தமிழ்ப்பளிக்களுக்காகவும் தொடர்ந்து  சேவையாற்றி வருகிறார் என்று குறிப்பிட்ட அவர் தொடர்ந்து மக்களுக்காக கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்று கூறினார்.

நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா தியாகராஜன் சிறந்த இலக்கிய பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் நோக்கம் என தெரிவித்தார்.

அதோடு பிரதமருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும். தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான உரிமம் தொடர்பாக பேசியதாகவும் கூறினார். அதோடு பெருமளவிலான ஒரு கல்வி திட்டத்தையும் முன்னெடுக்கப் போவதாக அவர் கூறினார்.

முத்து முத்தான பாடல்களாலும்,அது தொடர்பான குறிப்புகளுடனும் மேடையை அலங்கரித்தார், சிறப்பு வருகை புரிந்த கலைமாமணி டி எல் மஹாராஜன்.

மருத்துவர் ஜெயபாலன் கண்ணதாசன் குறித்தும் திரையிசை இலக்கியம் குறித்தும் பேசினார். இந்த நிகழ்ச்சி கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைக் கௌரவிக்கும் விதமாக அவருக்கு ஈகம் செய்யப்பட்டது.

பொதுமக்களின் அமோக ஆதரவில் திரையிசை கண்ட இலக்கியம் நிகழ்வு வெற்றித் திருவிழாவாய் அமைந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *