ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு மூன்றாவது தங்கம்!

top-news

கோலாலம்பூர், செப் 23: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவு குமிதே போட்டியில் சி. ஷாமலரானி இன்று வெற்றி பெற்றார்.

ஜப்பானின் ஐச்சியில் உள்ள டோயோஹாஷி ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டி 0-0 என்ற கணக்கில் முடிவடைந்ததை அடுத்து, நடுவர்களின் தீர்ப்பின் மூலம் ஹாங்காங்கின் சாங் யீ டிங்கை 27 வயதான ஷாமலரானி தோற்கடித்தார். 

முன்னதாக, அவர் அரையிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் குல்ஷன் அலிமர்தனோவாவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் அவர் அலிமர்தனோவாவிடம் தோல்வியடைந்தார்.

முன்னதாக, ஷாமலரானி தொடக்கச் சுற்றில் மக்காவின் ஃபோங் மான் வாயை 8-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். பின்னர் காலிறுதிப் போட்டியில் வங்காளதேசத்தின் சயாமா ஜமானை 5-4 என்ற கணக்கில் வென்றார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *