இது PN+ செயல்திட்டம்! அனைத்து கட்சிகளுக்கும் திறந்தே இருக்கின்றன கதவுகள்! - பாஸ் துணைத் தலைவர்
- Shan Siva
- 16 Jun, 2026
கோலாலம்பூர்,
ஜூன் 16: பெர்சாத்து கட்சியுடனான தனது அரசியல் ஒத்துழைப்பை
பாஸ் கட்சி முடிவுக்குக் கொண்டுவந்த போதிலும், பெரிகாத்தான் நேஷனல் பிளஸ் (PN+) செயல்திட்டம் தொடரும்
என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான்
கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PN+ கட்டமைப்பின் கீழ்
எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கு இந்த நடவடிக்கை அதிக வாய்ப்புகளைத்
திறந்துவிட்டுள்ளதாக துவான் இப்ராஹிம் கூறியுள்ளார்.
PN+ என்பது பிஎன் உடன் இணைய
விரும்பும் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு
முயற்சியாகும் என்று அவர்
கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஹம்சா ஜைனுதீனால்
நிறுவப்பட்ட பார்ட்டி வவாசான் நேகாராவுடன் பாஸ் கட்சிக்கு உள்ள நல்லுறவே, இந்தத் திறந்த அணுகுமுறையின் தொடக்கமாக
அமைந்தது என்று துவான் இப்ராஹிம் கூறினார்.
பெஜுவாங் மற்றும் பெர்ஜாசா உள்ளிட்ட பிற கட்சிகளிடமிருந்து வரும் விண்ணப்பங்களையும் பாஸ் கட்சி பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சி ஒரே குரலாக ஒலிப்பதை உறுதிசெய்ய, அனைத்துக் கட்சிகளுடனும் ஒத்துழைப்புக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக அவர் கூறினார்.
தேர்தல்கள் மற்றும் அரசியல் பணிகள் தொடர்பாக இந்த ஏற்பாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரு பொதுவான நிலைப்பாட்டால் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

