ஆர்எஸ்எஸ் விழாவில் நான் கலந்து கொள்ள இதுதான் காரணம் - சீமான்!

top-news
FREE WEBSITE AD

சென்னையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தொடர்புடைய அமைப்பின் நிகழ்வில் பங்கேற்றது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்தார்.

அவர் ஆர்எஸ்எஸ்-ன் பொது விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பான 'விஜில்' சார்பில், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பாரதி பிறந்த தினம் மற்றும் வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. "பாரதி கண்ட பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம்,தமிழ் இளைஞர்களின் பார்வைக்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரபாரதி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் பங்கேற்றது குறித்து செய்தியாளர்களிடம் சீமான் கூறும் பொழுது "கலந்து கொண்டது குறித்து விமர்சனங்கள் இல்லையென்றால் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? ஆர்எஸ்எஸ் மற்றும் தி.மு.க. சமூக இயக்கங்கள் என்று நான் சொன்னேனா, அவர்கள் சொன்னார்களா? இது ஆர்எஸ்எஸ் இயக்கம் அல்ல. ஒரு இலக்கிய அமைப்பு பாரதி பற்றி பேசச் சொன்னது. நான் பாரதியை எங்கும் பேசுவேன். பாரதி இருக்கும் இடம் தமிழ். தமிழ் எனது தாய்," என்றார்.

மேலும் அவர், "தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். நாளைக்கு தி.மு.க. பாரதி பற்றி கூட்டம் போட்டால், அங்கேயும் நான் பேசுவேன். 12 ஆண்டுகள் திராவிட கழக மேடைகளில் பேசும்போது அது இனித்ததுதானே?" என்று கேள்வி எழுப்பினார்.சு பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதை சுட்டிக்காட்டிய சீமான், "ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நூல் வெளியீட்டு விழாவில், 'பாஜகவுக்கு 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுத்து, இந்தியா முழுவதும் அதன் அதிகார கிளையை பரப்ப உதவியவர் கருணாநிதி' என்று பேசிய வீடியோ இருக்கிறது. அதை போட்டு காட்டவா?" என தெரிவித்தார்.

மேலும் "இன்றைக்கு வேல்ஸ் பல்கலைக்கழக திறப்பு விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கும்போது, உங்கள் அமைச்சர், உங்கள் ராஜ்யசபா எம்.பி. கமலும் கலந்து கொள்கிறார்களே; அதற்கு உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பினார். "நான் எங்கே போய் நிற்கிறேன் என்று பேசாதீர்கள். நான் என்ன பேசினேன் என்பதைப் பற்றி பேசுங்கள்," என்று சீமான் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *