பெண்ணுடன் கிசுகிசு! நிக் நஸ்மியின் நிலை என்னவாகும்?! அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

top-news

கோலாலம்பூர், அக். 22: பெண் ஒருவருடன் தனிமையில் இருந்ததாக எழுந்த சர்ச்சையால், பெர்சாமா கட்சியின் இணைத் தலைவரான நிக் நஸ்மி நிக் அகமதுவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இச்சம்பவம் பழமைவாத மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் பெர்சாமா கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவர்களின் அரசியல் செயல்பாடுகளையும் தனித்தனியாகப் பார்க்கும் போக்கைக் கொண்டிருப்பதாக டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின் தெரிவித்தார்.

எனவே, இந்தச் சர்ச்சையால் நிக் நஸ்மி தமது தற்போதைய ஆதரவாளர்களை இழப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று அவர் கூறினார்.

ஒரு சர்ச்சைக்குப் பின்னர் அரசியலில் மீண்டும் எழுச்சி பெறுவது சாத்தியமானது என்றும், அது சம்பந்தப்பட்ட அரசியல்வாதி சார்ந்திருக்கும் கட்சியின் தன்மையைப் பொறுத்தது என்றும் ஜேம்ஸ் சின் விளக்கினார்.

இதனிடையே, மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஷாசா ஷுக்ரியும், இந்தச் சர்ச்சை நிக் நஸ்மியின் அரசியல் வாழ்க்கையில் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் இத்தகைய சர்ச்சைகள் அரசியல்வாதிகளுக்குக் குறுகியகாலப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

குறிப்பாக, மலாய் வாக்காளர்கள் மத்தியில் நிதி முறைகேடுகள் தொடர்பான சர்ச்சைகளைக் காட்டிலும் பாலியல் தொடர்பான சர்ச்சைகள் அதிக உணர்வுபூர்வமான எதிர்வினைகளை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *