சுக்மா 2026 சின்னமாக வெள்ளை கழுகு!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஆக. 16-  அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 ஆம் தேதி வரை சிலாங்கூரில் நடைபெறவிருக்கும்  சுக்மாவின்  சின்னமாக வெள்ளை கழுகு தேர்வு செய்யப்பட்டுள்ளது .

கடந்த 1998 ஆம் ஆண்டு சுக்மா போட்டியை சிலாங்கூர் ஏற்று  நடத்தியபோதும் சிலாங்கூரின் சின்னமாக வெள்ளை கழுகு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு ராஜா மூடா மூசா மண்டபத்தில்  நடைபெற்ற சிலாங்கூர் சுக்மா வெளியீட்டு விழாவின்போது   மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த கழுகு சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

சிலாங்கூர் மீண்டும் இப்போட்டியை நடத்துவதைக் கொண்டாடும் வகையில்  ஜோதி வடிவிலான ரோமானிய எண் அதிகாரப்பூர்வ சுக்மா சிலாங்கூர் 2026 சின்னமாக வெளியிடப்பட்டது.

'நமது தாளம், நமது செயல்' என்ற கருப்பொருளையும் சிலாங்கூர் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *