‘வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றுங்கள்’ – பிரதமர் மோடி அழைப்பு
- Surendran Sumdraraj
- 10 Aug, 2026
புதுடெல்லி, ஆக. 10-
நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றும் ‘வீடுதோறும் மூவர்ணக்கொடி’ இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டான 2022ஆம் ஆண்டு முதல் ‘வீடுதோறும் மூவர்ணக்கொடி’ இயக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான ‘வீடுதோறும் மூவர்ணக்கொடி’ இயக்கம் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 17ஆம் தேதி வரை இந்த இயக்கம் நடைபெறுகிறது.
இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் பொதுமக்கள் இந்த இயக்கத்தில் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



