மியன்மாரில் ஜோ லோவா? - இதுவரை காவல்துறைக்கு தகவல் இல்லை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 22: 1 எம்டிபி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஜோ லோ மியன்மாரில் தலைமறைவாகியிருப்பதாகக்  கூறப்படுவது குறித்து காவல்துறைக்கு எந்தத் தகவலும் இல்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடீன் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஜோ லோ குறித்த எந்தத் தகவலையும்  அந்த நாடு காவல்துறைக்கு வழங்கவில்லை என்று அவர் கூறினார்.

இதுவரை, இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை, மியான்மர் எங்களுக்கு எந்த தகவலையும் கொடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் ஷபி அப்துல்லா, ஜோ லோ மியான்மரில் இருப்பதாகக் கூறியதை அடுத்து, ரசாருடீன் இவ்வாறு பதிலளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *