ஹோர்முஸ் அமெரிக்காவின் ஒரு பகுதி: டிரம்ப் அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 19 Aug, 2026
வாஷிங்டன்: ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்திய கிழக்கு பகுதியில் மோதல்கள் தற்போது நடைபெறாத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை நீரிணையை முழுமையாக திறக்க முடியாது என்றும் ஈரான் ஏற்கனவே கூறியுள்ளது.
இந்தச் சூழலில், டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் வளைகுடா பகுதியின் வரைபடம் ஒன்றை வெளியிட்டு, அதில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு, “இது அமெரிக்காவின் ஒரு பகுதி” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



