அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களிடம் விளக்க வேண்டும்! - அன்வார்

top-news

கோலாலம்பூர், அக் 5: நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறல் இல்லாததே முக்கிய காரணம் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆனால், உலக மற்றும் தேசிய நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என அவர் கூறினார்.

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் வரிகள் மற்றும் தொடர்ந்து இடம்பெறும் கடுமையான அநீதிகள் ஆகியவை இதற்கு உதாரணங்கள் என பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற கசானா மெகாட்ரெண்ட்ஸ் கருத்தரங்கம் 2026-ஐ தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

நவீன சமூகங்கள், குறிப்பாக ஜனநாயக நாடுகள் கூட, அதிகாரத்தில் இருப்பவர்களை முழுமையாக பொறுப்புக்கூறச் செய்வதில் தோல்வியடைந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *