அந்த DAP தலைவர்கள் அறிவற்றவர்கள்! – ஹாடி சாடல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 21: அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாத்தைப் பயன்படுத்துவதாகத் தன்னைக் குற்றம் சாட்டிய நான்கு மலாய் டிஏபி தலைவர்களை, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் “கல்வியறிவற்றவர்கள்” என்று முத்திரை குத்தியுள்ளார்.

அரசியலமைப்பை மீண்டும் மதச்சார்பற்ற ஆட்சியை நோக்கித் திருப்ப டிஏபி விரும்புவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் தான் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, இஸ்லாமியப் புனித நூல்கள், கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் டிஏபி தலைவர்களின் கடந்தகால அறிக்கைகளை உறுதியாக அடிப்படையாகக் கொண்டது என்று ஹாடி கூறினார்.

என் எழுத்துக்கள் மூலம் அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாத்தைப் பயன்படுத்துவதாக என் மீது குற்றம் சாட்டிய நான்கு மலாய் டிஏபி தலைவர்களும் கல்வியறிவற்றவர்கள்.

அவர்கள் கற்றறிந்தவர்கள் அல்ல என்று அவர் கூறியதாக பெரித்தா  ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முகநூல் பதிவில், அரசியலமைப்பை மீண்டும் மதச்சார்பற்ற ஆட்சியை நோக்கித் திருப்புவதற்கும், மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தைப் பெருமைப்படுத்துவதற்கும் டிஏபி செயல்படுவதாக ஹாடி குற்றம் சாட்டினார்.

நகரப் புனரமைப்பு என்ற பெயரில் ஏழை மலாய்காரர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டதே முன்மொழியப்பட்ட நகரப் புனரமைப்புச் சட்டம் என்றும் அவர் கூறினார்.

மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய காலனிவாதிகளால் கொண்டுவரப்பட்ட ஒரு பிறழ்ந்த போதனை என்றும், அரசியலமைப்பு மதச்சார்பற்ற தன்மை கொண்டது என டிஏபி வாதிடுவதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *