ஏமனில் ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹவுதி ஏவுகணைத் தாக்குதல்; 73 பேர் பலி!

top-news

ஏமன்: ஏமனின் தெற்குப் பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 73 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஏமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-அலாம் ராணுவப் பயிற்சி முகாமை இலக்காகக் கொண்டு, கடந்த திங்கட்கிழமை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூன்று ஏவுகணைகளை வீசியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, பாதுகாப்புப் படையில் புதிதாகச் சேர்ந்தவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் முதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளுக்குப் பின்னர் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்தது. மேலும், 14 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காகப் பிற மாகாணங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *