சவுதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணை, டிரோன் தாக்குதல்!

top-news

ரியாத்:

சவுதி அரேபியா மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஏமனில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் ஏமன் அரசுப் படைகளுக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமனின் தலைநகர் சனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவைக் குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் அப்கியூக் நகரில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், டமாமில் உள்ள கிங் பகத் சர்வதேச விமான நிலையம் மற்றும் நிஜ்ரான் பகுதியில் உள்ள ராணுவத் தளம் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளனர்.

இதற்கிடையே, ரியாத்தில் ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், சில வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்