HRD CORP'இல் SPRM! இடைக்கால விடுமுறையில் செல்லும் தலைமை இயக்குநர் Shahul Hameed!

top-news
FREE WEBSITE AD

HRD CORP தொடர்பானக் கணக்குகளில் குறைபாடுகள் உள்ளதால் தற்போது மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணை நடத்தி வருவதால், தாம் எந்தவொரு வகையிலும் தலையிடாமல் இருப்பதை உறுதிச் செய்ய இடைக்கால விடுமுறையில் செல்வதாக HRDF CORP தலைமை இயக்குநர் Datuk Shahul Hameed Dawood தெரிவித்துள்ளார்.

PAC எனும் அரசு பொதுக் கணக்குக் குழு, HRD CORP செலவறிக்கைக்கும் அதன் முதலீடுகளுக்கும் சுமார் 3.77 Billion ரிங்கிட் வேறுபாடுகள் இருப்பதாகவும், கணக்கறிக்கையின் மூலம் 3.77 billion ரிங்கிட் தொகை முறைகேடு நடந்திருப்பதாகவும் வெளிப்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து HRD CORP தலைமை இயக்குநரான DATUK SHAHUL HAMEED தனது சொந்த நிறுவனத்துக்கும் HRD CORP க்கும் தொடர்பு இருப்பதாக வெளி வந்த செய்திகளையும் அவர் மறுத்த நிலையில், தற்போது தாமாக முன்வந்து விருப்பு ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளார். 

தமது ஓய்வுக்குறித்தான முடிவைத் தம் முழு மனத்துடன் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *