லஹாட் டத்துவில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து மூவர் பலி!
- Shan Siva
- 01 Sep, 2026
கோலாலம்பூர். செப் 2: நேற்று இரவு சபா லஹாட் டத்து ஜாலான் ஊத்தான் சிம்பாங் பாகாஹக் சாலையில் கார் சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்தார்.
புரோட்டான் ஏரோபேக் காரின் ஓட்டுநர் ஒரு வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததால், அது சறுக்கி ஐந்து மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இரவு 7.38 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சும்சோவா ரஷீத் கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் நான்கு பேர் சிக்கியிருப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தில் சுகாதார அமைச்சகப் பணியாளர்களால் மூன்று பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
காயமடைந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் உடல்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இரவு 8.45 மணிக்கு மீட்புப் பணி முடிவடைந்தது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



