குடிநுழைவுத்துறை லாரி மோதி மூவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 19: இன்று அதிகாலை ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் குடிநுழைவுத் துறை லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது சம்சுரி முகமது ஈசா, அந்த குடும்பம் பேராக், கம்பாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

உயிரிழந்தவர்கள் 53 வயதான ஷேக் முகமது ஃபிர்தாவுஸ் ஷேக் யஹ்யா மற்றும் அவரது மகள்களான 25 வயதான சித்தி நூர் சஸ்லின், 12 வயதான சித்தி தர்விஸ்யா அவுனி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஷேக் முகமது ஃபிர்தாவுஸின் மனைவி, 55 வயதான நோர்ஹயாதி ரசாலி, படுகாயமடைந்து கோலாலம்பூர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு மகளான 28 வயதான சித்தி நூர் ஷகிரா இந்த விபத்தில் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஜூ சந்திப்பு போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் அதிகாலை 1 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் குடிநுழைவுத் துறை லாரி, ஒரு புரோட்டான் சாகா மற்றும் ஒரு இனோகோம் மேட்ரிக்ஸ் வாகனங்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பாதசாரிகளும் சம்பந்தப்பட்டிருந்தனர்.

43 வயதுடைய நபரால் ஓட்டப்பட்ட குடிநுழைவுத்துறை லாரி, புரோட்டான் சாகா மீது மோதுவதற்கு முன்பு, அதன்  விளக்குகள் மற்றும் சைரன் ஒலித்துக்கொண்டிருந்த நிலையில் சிகப்பு சிக்னலை மீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலின் தாக்கத்தால், லாரி கட்டுப்பாட்டை இழந்து, அந்தச் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த இனோகோம் மேட்ரிக்ஸ் மற்றும் நான்கு பாதசாரிகள் மீது மோதியது.

பாதிக்கப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அதேசமயம் நோர்ஹயாதிக்கு தலை, வலது கை மற்றும் இரண்டு கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன.

இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *