வேறுபட்ட கூட்டணி ஆட்சி இருந்தாலும் உறவு பாதிக்கப்படாது – காலிட்
- Surendran Sumdraraj
- 09 Jul, 2026
கோத்தா திங்கி, ஜூலை 9-
மத்திய அரசும் மாநில அரசும் வேறுபட்ட அரசியல் கூட்டணிகளால் வழிநடத்தப்பட்டாலும், அவற்றுக்கிடையிலான உறவு பாதிக்கப்படாது என அம்னோ உதவி தலைவர் Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு மற்றும் பொறுப்புகள் சட்டமுறையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எந்தக் கூட்டணி மக்களால் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மாநில வளர்ச்சி மற்றும் மக்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மதித்து, ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.
அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi முன்பு குறிப்பிட்டது போல, அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியான பொறுப்புகளுடன் இருப்பதாக Mohamed Khaled விளக்கினார்.
இரு அரசுகளும் நாடும் மாநிலமும் தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றன என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



