10 மாநிலங்களில் இடி - மழை! புயல் தாக்கும் அபாயம்!
- Shan Siva
- 09 Oct, 2024
பினாங்கு மற்றும் சிலாங்கூர் உட்பட மலேசியாவின் 10 மாநிலங்களில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12.40 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, பெர்லிஸ் மற்றும் மலாக்கா மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசக்கூடும்.
கெடா லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொகோக் சேனா மற்றும் படாங் தெராப், பினாங்கு வடக்கு செபராங் பிராய், மத்திய செபராங் பிராய் மற்றும் தெற்கு செபராங் பிராய்)ம், கிளந்தானில் ஜெலி மற்றும் பகாங்கில் கேமரன் மலைப்பகுதி போன்ற இடங்களில் புயல் வீசக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிலாங்கூர் சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கிள்ளான் , பெட்டாலிங் மற்றும் குவாலா லங்காட் ஜோகூர் தங்காக், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு. சரவாக் கூச்சிங் , செரியான், சமராஹான் , சபா: கூடாட் ஆகிய பகுதிகளைப் புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *