அதிகாரப் பசி! எங்களைப் பலியாடு போல சித்தரிக்கும் பாஸ்! - அஸ்மின் அலி

top-news

கோலாலம்பூர், அக் 20: பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்தக் கூட்டணியின் நிர்வாகம் குறித்து ஆகஸ்ட் 11 அன்று பெர்சாத்து (Bersatu) கட்சி அளித்த புகார் சரியானதே என்பதை நிரூபிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி இன்று தெரிவித்தார்.

கூட்டணியின் அரசியலமைப்பின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை PN தலைமை மறுத்ததாகவும், இது 1966-ஆம் ஆண்டின் சங்கங்கள் சட்டத்தை (Societies Act 1966) மீறும் செயல் என்றும், ஆகஸ்ட் மாதத்திலேயே சங்கங்களின் பதிவிலாகாவிடம்  தாங்கள் விளக்கமளித்ததாக அவர் கூறினார்.

மேலும், PN-ன் பதிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், தங்களை ஒரு அரசியல் பலியாடு போலச் சித்தரித்து, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக அனுதாபத்தைப் பெற PAS முயற்சிப்பதாகவும் அஸ்மின் விமர்சித்தார்.

பிரச்சாரம் செய்வதையும், தீவிரமான அடையாள அரசியலில் ஈடுபடுவதையும் நிறுத்துங்கள். ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் சிறந்த நிர்வாக முறைகளின் அடிப்படையில் ஒரு அமைப்பை வழிநடத்தத் தவறிய PAS, அடிக்கடி தனது கூட்டாளிகளுக்குத் துரோகம் இழைத்துள்ளது என்பதே உண்மை.

அதிகாரப் பசி கொண்ட ஒரு குழுவிற்கு, PN ஒரு புகலிடமாக இருக்க முடியாது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சங்கங்களின் பதிவிலாகாவின் முடிவை முழுமையாக ஆய்வு செய்யப்போவதாகவும், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து உச்சமன்றக் குழு  கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அஸ்மின் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *