அவரை ஏன் ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்! - அந்தோணி லோக் குறித்து அன்வார்

top-news

கோலாலம்பூர், செப் 30: DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் (Loke Siew Fook)  தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார் இப்ராகிம் அவருடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஹஸ்மா அலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அவசரமாகச் சென்று கொண்டிருந்தபோது அந்தக் கடிதத்தைப் பெற்றதாகக் கூறிய அன்வார், லோக் ஏன் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

அவரை ஏன் ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்? முறைகேடுகளில் ஈடுபடாதவர்கள்தான் ராஜினாமா செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள்.

அவரது பணி சிறப்பாக உள்ளது; அமைச்சராக அவரது செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கிறது. நான் அவருடன் (லோக்கின் ராஜினாமா குறித்து) பேசுவேன் என்று இங்குள்ள KLGCC மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'மலேசிய தொழில்முறை தினம்' (Malaysia Professional Day) தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *