தாலிபான் குழுவை கல்வி அமைச்சு அழைத்தது ஏன்? – லிம் குவான் எங் கேள்வி
- Shan Siva
- 20 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 20: இந்த மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரிகள் சந்திப்பு தொடர்பான கல்வி அமைச்சின் முடிவு குறித்து பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் கல்வி
குறித்த தலிபான் தலைமையிலான அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை கருத்தில் கொள்ளும்போது, கல்வி அமைச்சின் இந்தச் சந்திப்பு மிகவும் கவலை அளிக்கிறது
என்று அவர் கூறினார்.
எனவே, இது தொடர்பாக மலேசியப் பொதுமக்களுக்கு கல்வி அமைச்சு
ஒரு விளக்கத்தை வழங்க முடியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் தனது அமைச்சகம் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தூதுக்குழுவிடமிருந்து வருகையைப் பெற்றதாகவும், அவர்களிடம் கல்வி பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறியதை அடுத்து லிம் இந்தக் கேள்வியை எழுப்பினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *