‘டோரதி’ போன்ற படம் வந்ததற்குப் பெருமைப்படுகிறேன் - தமிழரசன் பச்சமுத்து

top-news

சென்னை, செப். 30 –

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு திரையுலகினர் மத்தியில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘டோரதி’ படத்தைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில் அமைந்துள்ள இப்படம், சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

படம் வெளியானது முதல் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா மற்றும் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரும் படத்தை பாராட்டியுள்ளனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *