“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரியவில்லை” – நடிகர் சிலம்பரசன் பேச்சு

top-news
FREE WEBSITE AD

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசன், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “அரசன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “வடசென்னை” படத்தின் கதைக்கள உலகத்தின் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தானு தயாரிக்கிறார். சிம்பு–வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சிம்புவிடம் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், சிறு வயதில் இருந்தே தனக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை என்று கூறினார். தனது தந்தை அரசியலில் சந்தித்த சிரமங்களை அருகில் இருந்து பார்த்ததாகவும், மக்களுக்காக உழைக்க நினைத்த அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் தன்னை பாதித்ததாகவும் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *