சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை; டிசம்பரில் வங்கதேசம் திரும்புவேன் – ஷேக் ஹசீனா உறுதி

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஆக. 6-

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தன்னை சிறையில் அடைத்தாலும் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், வரும் டிசம்பர் மாதத்தில் வங்கதேசம் திரும்புவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வரும் ஷேக் ஹசீனா, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றியபோது இந்த கருத்தைத் தெரிவித்தார். வங்கதேச மக்களுடன் மீண்டும் இணைய வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும், அதற்காக எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், தன்னை கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றாலும், தனது சொந்த நாட்டின் மண்ணில் திரும்பிச் செல்லும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஹசீனா தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *