நாளை த.வெ.கவில் இணையவுள்ளேன்; சி. விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 01 Jul, 2026
சென்னை, ஜூலை 1 –
முன்னாள் அமைச்சரும் அரசியல் தலைவருமான சி. விஜயபாஸ்கர், நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கும், மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடனும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கர், அதனைத் தொடர்ந்து த.வெ.கவில் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதனை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சி. விஜயபாஸ்கருடன் மேலும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் த.வெ.கவில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், இந்த நிகழ்வு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



