“மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டேன்” – நடிகர் யாஷ்
- Surendran Sumdraraj
- 10 Aug, 2026
பெங்களூரு, ஆக. 10-
தொழிலாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்றும், தனது மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டேன் என்றும் நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் யாஷும் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தனது வாழ்க்கை மற்றும் கொள்கைகள் குறித்து பேசிய யாஷ், தனது மனைவிக்கு தான் அனைத்து வகையிலும் நன்றியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். தன்னுடன் நண்பராக இருப்பதும், இணைந்து பணியாற்றுவதும் எளிதான விஷயம் அல்ல என்றும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தொழில் மற்றும் தனிப்பட்ட உறவுகள் என எந்த விஷயமாக இருந்தாலும் நேர்மையும் உண்மையும் முக்கியம் என்றார்.
“தொழில் என்றாலும் சரி, உறவு என்றாலும் சரி நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதைச் செய்தாலே கடவுள் நம்முடன் இருப்பார் என்று நம்புகிறேன். மனசாட்சிக்கு விரோதமாக எதையும் நான் செய்ய மாட்டேன்,” என்று யாஷ் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



